தூத்துக்குடி தெற்கு மாவட்டம், மேற்கு மண்டல பாஜக சார்பில், கொரோனா நோய்தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தெற்கு மாவட்டம், மேற்கு மண்டலம் சார்பாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கொரோனா நோய்தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பத்தாவது நாளாக அண்ணாநகர், பத்திரகாளி அம்மன் கோவில் பகுதியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .
நிகழ்ச்சியில் பாஜக தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ், மண்டல அமைப்பாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை தன்னார்வலர்கள் மற்றும் மாவட்ட, மண்டல நிர்வாகிகள் செய்திருந்தனர்.