• vilasalnews@gmail.com

காவல்துறையினருக்கான தடுப்பூசி சிறப்பு முகாம்

  • Share on

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில்   காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினருக்கான தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  தலைமையில் நடைபெற்று வருகிறது.

மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் அலுவலக நிர்வாக அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் உட்பட சுமார் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்று வருகின்றனர். தடுப்பூசி போடாத அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள், சிறப்பு பிரிவு காவலர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம் தூத்துக்குடி மாநகர நகர் நல அலுவலர்  வித்யா, மருத்துவர்  ஜல்சி ஆகியோர் தலைமையினால மருத்துவக்குழுவினர் தலைமையில் நடைபெறுகிறது.

இந்த சிறப்பு முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார். காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் பலர் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

  • Share on

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் ரூ.16.50 லட்சம் மதிப்பில் கொரோனா நிவாரண உதவி பொருட்கள் வழங்கல்

தூத்துக்குடி பாஜக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கல்

  • Share on