• vilasalnews@gmail.com

ஒரே நாளில் 5 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை

  • Share on

தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சமீபத்தில் மனைவியை எரித்து கொன்ற கணவர் உட்பட 4 பேர் மற்றும் கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட ஒருவர் உட்பட  5 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

கடந்த 24.04.2021 அன்று தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு கல்மேடு பகுதியிலுள்ள முள்காட்டில் தூத்துக்குடி நடராஜபுரம் பகுதியை சேர்ந்த முனியசாமி (43) மனைவி முருகலெட்சுமி (36) என்பவரை அவரது கணவர் முனியசாமி மற்றும் அவரது சகோதர்களான தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன்கள் சங்கர் (29), நீலமேகம் (28), சுப்புராஜ் (எ) பொன்ராஜ் ஆகியோர் தீயிட்டு எரித்து கொலை செய்த வழக்கில் தருவைக்குளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கர், நீலமேகம், சுப்புராஜ் (எ) பொன்ராஜ் மற்றும் முனியசாமி ஆகியோரை கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தருவைகுளம் காவல் நிலைய ஆய்வாளர்  (பொறுப்பு) திரு. முருகன் அவர்களும்,

கடந்த கடந்த 30.04.2021 அன்று  கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பன்னீர்குளம் கருப்பசாமி கோயில் அருகே அதே பகுதியைச் சேர்ந்தவர்களான மலையாண்டி மகன் ராமகிருஷ்ணன் (41), மாடசாமி மகன் தங்கதுரை (37) மற்றும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமையா மகன் கருப்பையா (58) ஆகியோரை முன்விரோதம் காராணமாக பன்னீர்குளம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் (42) மற்றும் அவரது தந்தை ராமர், அவரது சகோதரர்கள் சுடலை மற்றும் கருப்பசாமி ஆகியோர் அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள வழக்கில் கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கில் முக்கிய எதிரியான மாரியப்பன் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கயத்தாறு  காவல்நிலைய ஆய்வாளர் திரு. மணிவண்ணன் அவர்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.

மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் 5 எதிரிகளையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர்  செந்தில் ராஜ்  மேற்படி எதிரிகளான 1) தூத்துக்குடி நடராஜபுரம் பகுதியை சேர்ந்த முனியசாமி, தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன்கள் 2) சங்கர் , 3) நீலமேகம், 4) சுப்புராஜ் (எ) பொன்ராஜ் 5) பன்னீர்குளம் பகுதியைச் சேர்ந்த ராமர் மகன் மாரியப்பன் ஆகிய 5 எதிரிகளையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் எதிரிகள் 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையிலடைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை கடந்த 4 மாதங்களில் மட்டும் 68 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • Share on

மாப்பிள்ளையூரணி பஞ்., கொரோனா தடுப்பூசி முகாம் - கனிமொழி எம்பி; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தனர்

ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடக்கம்

  • Share on