• vilasalnews@gmail.com

மாப்பிள்ளையூரணி பஞ்., கொரோனா தடுப்பூசி முகாம் - கனிமொழி எம்பி; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தனர்

  • Share on

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை கனிமொழி எம்பி; அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று 2-வது அலை தமிழகத்தில் தீவிரமாக பரவி வருகிறது. தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்கள பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அதனைத்தொடர்ந்து, மாப்பிள்ளையூரணி இந்து நாடார் பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர், துணைத்தலைவர் கோயில்மணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் அனைவரையும் வரவேற்றார்.


இந்த தடுப்பூசி முகாமை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி,  மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் போஸ்கோராஜா, மாநில திமுக மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் பில்லாஜெகன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், ஒன்றிய செயலாளர்கள் இளையராஜா, மாடசாமி, துணைச்செயலாளர் மைக்கேல்ராஜ், ஓட்டப்பிடாரம் ஒன்றிய குழு தலைவர் ரமேஷ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜோதிராஜா, ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் ராஜேந்திரன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் பிளோமின்ராஜ், விவசாய அணி துணை அமைப்பாளர் தங்கராஜ்,


ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி, கூட்டுறவு கடன் சங்க துணைத்தலைவர் சிவக்குமார், ஒன்றிய கவுன்சிலர் பாலன், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மகேஸ்வரி, பாத்திமாபீவி, பாரதிராஜா, பாலம்மாள், தங்கப்பாண்டி, சக்திவேல், ராணி, வசந்தக்குமாரி, பாண்டியம்மாள், ஸ்டாலின், உமாமகேஸ்வரி, தங்கமாரிமுத்து, ஜேசுராஜா, பெலிக்ஸ், ஓன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஸ்டாலின், மாவட்ட பிரதிநிதி நெல்சன், கிளைச்செயலாளர்கள் காமராஜ், ஆனந்தகுமார், பாலுநரேன், சுதாகர், சப்பாணி முத்து, சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, கபடி கந்தன், வட்டரா வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கி பலியான குடும்பத்தினருக்கு நிதியுதவி!

ஒரே நாளில் 5 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை

  • Share on