• vilasalnews@gmail.com

திரு.வி.க நகர் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு முகாம் - எஸ்பி., பங்கேற்பு

  • Share on

தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றி கபசுரகுடிநீர் மற்றும் இலவச முககவசங்கள் வழங்கினார்.

இன்று (15.05.2021) திரு.வி.க நகர், இந்திரா நகர், J.J நகர், S.S நகர் பகுதிகளை சேர்ந்த வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக கொரோனா விழிப்புணர்வு முகாம் திரு.வி.க நகர் பகுதியில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில்:

கொரோனா வைரஸ் 2ம் அலை தீவிரமாக பரவி வருவதால் தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, அதன்படி 10.05.2021 முதல் 24.05.2021 வரை ஊரடங்கு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. தற்போது  இன்று (15.05.2021)  முதல் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை காய்கறி, பலசரக்கு மற்றும் மளிகை கடைகள்  செயல்பட மட்டுமே புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

காய்கறி, மளிகை மற்றும் பலசரக்கு கடைகளை தவிர வேறெந்த கடைகள் திறப்பதற்கும் அனுமதி இல்லை. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறிகளை தங்களது வீட்டின் அருகில் உள்ள கடைகளில் வாங்குமாறும் மேற்சொன்ன பொருட்களை வாங்க அதிக தூரம் பயணிப்பதை தவிர்க்க வேண்டும்.

ஏற்கனவே அறிவித்துள்ள இரவு நேர ஊடரங்கும், ஞாயிறு முழு ஊரடங்கும் அமலில் இருக்கும். இந்த ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் முழுமையாக கடைபிடித்தால் மட்டுமே நோய்தொற்றை முழுமையாக கட்டுபடுத்த முடியும். ஆகவே தமிழக அரசு விதித்துள்ள கட்டுபாடுகளை முழுமையாக பொதுமக்கள் கடைபிடித்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

மேலும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும், முகக்கவசத்தை உரிய முறையில் மூக்கு, வாய் ஆகியவற்றை முற்றிலுமாக மறைத்து முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரகுடிநீர் எடுத்துகொள்ள வேண்டும், மேலும் கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டு கொள்வதன் மூலம் நம் உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம்  என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  சிறப்புரை யாற்றினார். பின் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு கபசுரகுடிநீர், இலவச முககவசங்களை வழங்கினார்.


இந்த விழிப்புணர்வு முகாமிற்கான ஏற்பாடுகளை வளர்பிறை மக்கள் நலச்சங்க தலைவர் தமோதரன், துணை தலைவர்  சேவியர்,  செயலாளர் கண்ணன், துணை செயலாளர்  சார்லஸ் ராஜம் மற்றும் பொருளாளர்  விக்டர் ஆகியோர் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன், தனிப்பிரிவு தலைமை காவலர்  மாரிக்குமார் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலி

விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முகாம் - கனிமொழி எம்பி ; அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் ஆய்வு

  • Share on