• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலி

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலியாகினர்

தூத்துக்குடி மாவட்டத்தில் 885 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 523 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 605 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர்.

இதுவரை மாவட்டத்தில் 28 ஆயிரத்து 266 பேர் முழுமையாக குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் மருத்துவமனை மற்றும் வீடுகளில் 5 ஆயிரத்து 74 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் நேற்று கொரோனா தொற்று காரணமாக இறந்து உள்ளனர். இதனால் மாவட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்து உள்ளது.

  • Share on

தூத்துக்குடியில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் - நோயாளிகளுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்!

திரு.வி.க நகர் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு முகாம் - எஸ்பி., பங்கேற்பு

  • Share on