தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக மேலும் 885 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 885 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 33,523 ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்தவா்களில் 605 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 28,266 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்புக்குள்ளாகி தூத்துக்குடி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 62 வயது ஆண், 53 வயது பெண், 47 வயது ஆண், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயது ஆண் ஆகியோா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தனா். இதனால், மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 5074 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.