தூத்துக்குடி காய்கனி சந்தையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு கடந்த 10.05.2021 முதல் 24.05.2021 வரை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தூத்துக்குடியில் காய்கனி சந்தையில்தான் மக்கள் அதிகம் கூடுமிடமாகும், இதில் சமூக இடைவெளி கடைபிடிக்கப் படுகிறதா, அனைவரும் முகக்கவசம் அணிந்து வருகின்றனரா என்பதை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று (13.05.2021) காய்கனி சந்தைக்கு நேரில் சென்று பார்வையிட்டு, காவல்துறையினரின் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பின் டிரோன் கேமரா மூலம் மக்கள் அதிகமாக உள்ள இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு வருகிறதா என்பதையும் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.