தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக சிதம்பர நகரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட் கடைகளை காவல்துறை பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.
தூத்துக்குடி சிதம்பர நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஓட்டல், மீன் மற்றும் இறைச்சிகடை, மண்பானை கடை, என 60க்கும் மேற்பட்ட கடைகள் கடைகள் இயங்கி வந்தன. இந்த இடத்தில் தற்போது மாநகராட்சி மூலம் புதிதாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளன. எனவே, மாநகராட்சி நிர்வாகம் மார்க்கெட்டை காலிசெய்ய உத்தரவிட்டது. இது தொடர்பாக வியாபாரிகள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
பின்னர் மேலும் அவகாசம் வழங்கி கடைகளை காலி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், மே 12 ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி உத்தரவிட்டிருந்தார். மாநகராட்சி அளித்த அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், இன்று மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகள் மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.
இதையொட்டி அங்கு காவல்துறை பாதுகாப்புடன் கடைகள் ஜேசிபி எந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. இதுபோல் தூத்துக்குடி வஉசி மார்க்கெட் கடைகளையும் காலி செய்ய மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.