• vilasalnews@gmail.com

தூத்துக்குடி விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. திடீர் ஆய்வு!

  • Share on

தூத்துக்குடி விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனைக்குழு தலைவரும், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான கனிமொழி நேற்று காலை திடீரென தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு வந்தார். அவரை விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்து இயக்குனரிடம் கனிமொழி எம்.பி. கேட்டு அறிந்தார்.

அப்போது, 1,349 மீட்டர் நீளமும், 30 மீட்டர் அகலமும் கொண்ட விமான நிலைய ஓடுதளத்தை 3,115 மீட்டர் நீளமும் 45 மீட்டர் அகலமும் கொண்டதாக விரிவாக்கம் செய்யும் பணிகள், இரவில் விமானங்கள் தரை இறங்குவதற்காக செய்யப்பட்டுள்ள வசதிகள், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள், புதிய பயணிகள் முனைய கட்டிட பணிகள், சிக்னல் கட்டிட பணிகள், புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கும் பணிகள், வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணிகள் போன்ற பல்வேறு பணிகள் குறித்து கனிமொழி எம்.பி.க்கு விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் எடுத்துக் கூறினார்.

மேலும், விமான நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள், நடைபெற உள்ள பணிகளை கனிமொழி எம்.பி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

இந்த ஆய்வின்போது விமான நிலைய மேலாளர் எஸ்.ஜெயராமன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

  • Share on

தூத்துக்குடியில் அமைச்சர்களுக்கு ஆட்சியர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு!

ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி - எம்பி., அமைச்சர் தொடங்கி வைத்தனர்!

  • Share on