தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக இந்து முன்னணி சார்பில் ரூ.20 ஆயிரம் மதிப்பில் வேர்க்கடலை மற்றும் நாட்டு சர்க்கரை வழங்கப்பட்டது.
தூத்துக்குடி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு உதவிடும் பொருட்டு மாநகர மாவட்ட இந்து முன்னணி சார்பில் ஊட்டச்சத்து மிக்க ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள வேர்க்கடலை மற்றும் நாட்டுச்சர்க்கரை வழங்கப்பட்டது.
தூத்துக்குடி பாலசரஸ்வதி சிட்பண்ட்ஸ் நிர்வாக இயக்குநர் தொழிலதிபர் பாலகிருஷ்ணன் இதற்கான உதவி செய்து இருந்தார். மாநகர மாவட்ட இந்து முன்னணி தலைவர் இசக்கி முத்துக்குமார் இதற்கான ஏற்பாடுகளை செய்து அரசு மருத்துவமனை கொரோனா தடுப்பு பிரிவு மருத்துவர்களிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.