தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை வசதி, கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், துப்புரவு பணியாளர்களுக்கான அரசு உயர்த்திய ஊதியத்தை உடனே வழங்க வலியுறுத்தியும் மாநகராட்சி அலுவலகத்தில் அமமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன ஆணைக்கிணங்க, தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மிகவும் மந்தமான நிலையில் நடைபெறும் சாலைப்பணி கால்வாய் அமைக்கும் பணிகளை விரைவாக செய்து முடிக்க வலியுறுத்தி மாநகர் பொறியாளர் சேர்மகனியிடமும்,
மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு அரசு உயர்த்திய ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், துப்புரவு பணிகளை சீராக செய்ய வலியுறுத்தியும், மாநகர் நல அலுவலர் வித்யாவிடம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் நகர்மன்ற தலைவருமான இரா.ஹென்றி தாமஸ் மனு அளித்தார்.
இந் நிகழ்வில் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் விபிஆர்.சுரேஷ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளரும் நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை தலைவருமான எட்வின் பாண்டியன், மாவட்ட மகளிரணி செயலாளரும் முன்னாள் மேயருமான அந்தோணி கிரேசி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட தொழிற்சங்க துணைச்செயலாளர் ஜேசுராஜ், எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் கார்த்திகை ராஜன்,
மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர் ஆறுமுகசாமி, முன்னாள் பகுதி செயலாளர் அண்டன் ரமேஸ், வட்ட செயலாளர்கள் பொன்சிங் தர்மராஜ், சாமிநாதன் மற்றும் அமமுக நிர்வாகிகள் தாசன், சம்பத்குமார், தெர்மல் மருது உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.