• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் - மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

  • Share on

தூத்துக்குடி துடிசியா கூட்டரங்கில் கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ்,  கரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் குமார்ஜெயந்த்,  இன்று தொடங்கி வைத்தார். 

தூத்துக்குடி மாவட்ட சிறு மற்றும் குறு தொழில் சங்க (துடிசியா) கூட்டரங்கில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ்,தலைமையில் மாவட்ட கரோனா தடுப்பு கண்காணிப்பு  / அரசு முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் கருவூலம் மற்றும் கணக்குத்துறைகள் அலுவலர் குமார்ஜெயந்த் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், கண்காணிப்பு அலுவலர் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. மேலும் 45 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

தகுதியுள்ள அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். சென்னை மாநகராட்சி பகுதியில் 53 சதவீதம் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 8 சதவீதம் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது மிகவும் குறைவான சதவீதம் ஆகும். தடுப்பூசி போட்டுள்ளவர்களுக்கு தொற்று வருவது குறைவாக உள்ளது. மேலும் பாதிப்பும் குறைவாக உள்ளது. சமூக வலைத்தளங்களில் வரக்கூடிய தவறான தகவல்களை நம்ப வேண்டாம். 45 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நமது மாவட்டத்தில் 15000க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் இருப்பில் உள்ளது. 

நமது மாவட்டத்தில் ஆனால் ஒரு நாளைக்கு 900 நபர்கள் மட்டுமே ஊசி போட்டு வருகின்றனர். தேவையான தடுப்பூசிகள் இருப்பில் இருந்தும் ஊசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எனவே துடிசியா போன்ற அமைப்புகள் இதுபோன்ற முகாம்களை தொடர்ந்து நடத்த வேண்டும். தடுப்பூசி போட்டுள்ள நபர்கள் மற்றவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து எடுத்துசொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: 

தமிழ்நாடு முதலமைச்சர் தடுப்பூசி முகாம்களை அதிக அளவில் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதனடிப் படையில் துடிசியா மூலம் தடுப்பூசி முகாம் துவங்கப்பட்டுள்ளது. நமது நாடு எதிர்கொண்டுள்ள கொரோனா மிக கொடிய தொற்றாகும். நாம் அனைவரும் விழிப்புணர்வுடன் இருந்தால் விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும். தொழில்களையும் செய்ய முடியும். கொரோனவிற்கு எதிராக இரண்டு அஸ்திரங்கள் உள்ளது. 

ஒன்று சமூக இடைவெளியை கடைபிடித்தல், கை கழுவுதல், முககவசம் அணிதல், மற்றொன்று தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல். தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளவர்களுக்கு கண்டிப்பாக கரோனா வராது. ஒரு சிலருக்கு மட்டுமே வந்துள்ளது. பாதிப்புகளும் மிக குறைவாகவே இருந்து வருகிறது. 45 வயதிற்கு மேற்பட்டுள்ள அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 

தடுப்பூசி போட்டாலும் முககவசம் அணிய வேண்டும். துடிசியா மூலம் தடுப்பூசி முகாம் துவக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் மற்றும் பல்வேறு தொழிற்சாலை அலுவலர்கள், குடும்பத்தினர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மேலும் இதுபோன்ற பல்வேறு முகாம்களையும் தொடர்ந்து நடத்த வேண்டும் என பேசினார்.

இந்நிகழ்ச்சியில் துடிசியா தலைவர் நேருபிரகாஷ் வரவேற்று பேசினார். தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் சொர்ணலதா, மாநகராட்சி நல அலுவலர் வித்யா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தின கொண்டாட்டம்!

தூத்துக்குடியில் துப்புரவு பணியாளர்களுக்கான அரசு உயர்த்திய ஊதியத்தை உடனே வழங்க வலியுறுத்தி அமமுக மனு!!

  • Share on