தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மதுவை பதுக்கி விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1872 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்படி துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் தலைமையில் தூத்துக்குடி நகர உட்கோட்டம் முழுவதும் உஷார் நிலையில் வாகன தணிக்கை, குற்ற ரோந்து மற்றும் மதுவிலக்கு ரோந்து பணியில் ஈடுபடுத்தப் பட்டனர். கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்து டாஸ்மாக் கடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று தூத்துக்குடி நகர உட்கோட்டதில் சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்த அண்ணா நகர் 2வது தெருவைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் கண்ணன் (23) என்பவரை உதவி ஆய்வாளர் வேல்ராஜ் தலைமையிலனா தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 1872 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த காவல் அதிகாரிகளை நகர துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் பாராட்டினார்.