• vilasalnews@gmail.com

முதலில் கொரோனா சவால்... அப்புறம் நீட் ரத்து தான் : கனிமொழி எம்.பி!

  • Share on

முதலில் கொரோனா சவால்களை வென்றுவிட்டு, நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கைகளாக மேற்கொள்ளும் என தூத்துக்குடி விமான நிலையத்தில் கனிமொழி எம்பி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாராளுமன்ற திமுக குழு துணைத் தலைவரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் இன்று மதியம் வருகை தந்தார். அவருக்கு பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள்  வரவேற்பளித்தனர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த  அவர் :

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. அதுமட்டு மின்றி தனியார் மருத்துவம னைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தமிழக அரசே கட்டணத்தை செலுத்தும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளார்.

மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுபோல மத்திய அரசிடம் அதிக அளவிலான தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அதுமட்டுமல்ல தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருவதாக தெரிவித்த அவர், தேவைப் பட்டால் தனியார் மண்டபங்களில் கல்லூரிகள் கொரோனா சிகிச்சை மையங்களாக பயன்படுத்துவதற்கான நடவடிக்கை களை தமிழக அரசு எடுக்கும் எனவும் இது போன்ற ஒரு நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக த்தான் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும், தமிழக அமைச்சர்கள் மாவட்டம் தோறும் சென்று கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என தெரிவித்தார். தற்போது உள்ள கொரோனா தடுப்பு பணிகளில் முழு வீச்சில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது இதை தொடர்ந்து நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து கொரோனா சவால்களை வென்றுவிட்டு முதல் கட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என தெரிவித்தார்.

  • Share on

ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு

மக்கும் குப்பை, மக்காத குப்பைகளாக தரம் பிரித்து கொடுங்கள் : மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!!

  • Share on