தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வருவாய் வட்டாட்சியர் அலுவலக ங்களில் காலியாகவுள்ள 25 பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் கீழ்க்கண்ட விவரப்படி மசால்ஜி 10 / இரவுக்காவலர் 12 / தோட்டக்காரர் 1 / துப்புரவு பணியாளர் 2 ஆகிய நிலையில் மொத்தம் காலியாகவுள்ள 25 பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட விவரப்படி காலியாகவுள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்ப டையில் நிரப்பிட தகுதியான நபர்களை ‘Out sourcing ” மூலம் அளித்திட அரசு விதிமுறைகளின் கீழ் பதிவு செய்யப் பட்ட / அரசின் அங்கீகாரம் பெற்ற தகுதிவாய்ந்த முகமையானது (Agency) முத்திரையிடப்பட்ட கவரில் உரிய விண்ணப்பதினை முகமை அங்கீகார நகல், ஊதிய ஒப்பந்த புள்ளி விபரங்களுடன் 31.05.2021-க்கு முன்பாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (பொ), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தூத்துக்குடி என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் மட்டுமே அனுப்பிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கவரின் மேல்புறம் ‘மசால்ஜி / இரவுக்காவலர் Out sourcing விண்ணப்பம்” என குறிப்பிடப்பட வேண்டும். 31.05.20210-க்கு பின்னர் வரப்பெறும் எவ்வித விண்ணப் பங்களும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. 04.06.2021 அன்று உரிய நாளிற்குள் இவ்வலுவலக த்தில் பெறப்பட்ட ஒப்பந்த புள்ளிகள் அனுப்பிய ஒப்பந்ததாரர்கள் முன்னி லையில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களால் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.