விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் சிறப்பாக தேர்தல் பணியாற்றிய காவல் துறையினருக்கு டிஎஸ்பி பிரகாஷ் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விளாத்திகுளம் தொகுதி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை உட்கோட்டத்தில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் சிறப்பான முறையில் தேர்தல் பணிகளை முடித்த அனைத்து காவல் அதிகாரிக ளுக்கும், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் முகாம் அலுவலகத்தில் வைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்கள் கூறினார்.
மேலும் தேர்தல் பணிகளை சிறப்பாக செய்தது போல் கொரோனா வைரஸின் 2-வது அலை வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு காலங்களில் காவலர்கள் பொதுமக்களிடம் கனிவாக பேசவும், மக்களிடம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுரை கூறினார்கள்.