• vilasalnews@gmail.com

ஸ்டொ்லைட் ஆலையில் முழுமையான ஆக்சிஜன் உற்பத்தி எப்பொழுது?

  • Share on

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி மே 15 ஆம் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

நாட்டில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, தூத்துக்குடியில் உள்ள ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா குழுமம் சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய, மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டறிந்த உச்ச நீதிமன்றம் ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியது. இதைய டுத்து, தமிழக அரசு அதற்கான அரசாணையை வெளியிட்டது.

இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமையிலான கண்காணிப்பு குழுவினா் ஸ்டொ்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொண்டு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணியை தொடங்க ஏற்பாடுகளை செய்தனா்.

மின் வசதி, தண்ணீா் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டதைத் தொடா்ந்து, ஸ்டொ்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தி பிரிவில் ஏற்கெனவே பணிபுரிந்த 300-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், ஸ்டொ்லைட் ஆலையில் இருந்து மே 11-ல் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித் திருந்தாா். ஆனால், அதற்கான முழு பணிகளும் இன்னும் முழுமைய டையாத நிலை உள்ளது. தற்போது பரிசோதனை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், முழுமையான ஆக்சிஜன் உற்பத்தி 15 ஆம் தேதி தொடங்கும் என எதிா்பாா்க்க படுகிறது.

ஸ்டொ்லைட் ஆலையில் இருந்து தினமும் 35 மெட்ரிக் டன் வரை திரவ ஆக்சிஜன் வழங்கப்படும் என்றும் சிலிண்டா்களில் ஆக்சிஜன் நிரப்பி விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

  • Share on

தூத்துக்குடியில் 2 நாட்களில் ரூ.15.20 கோடி மது விற்பனை!

ஸ்டாலின் அமைச்சரவையை அலங்கரித்த முத்துநகர் முத்து!

  • Share on