• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் 2 நாட்களில் ரூ.15.20 கோடி மது விற்பனை!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்குக்கு முந்தைய 2 நாட்களில் ரூ.15.20 கோடி மதுபானம் விற்பனை நடந்து உள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 2 வாரம் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. அதே போன்று டாஸ்மாக் கடைகளையும் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டது.

மேலும் பொதுமக்கள் வசதிக்காக ஊரடங்குக்கு முன்பு 2 நாட்கள் கட்டுப்பாடுகளில் தளர்த்தியது. இதனால் மக்கள் அதிக அளவில் பொருட்களை வாங்கினர். அதே போன்று மதுப்பிரியர்களும் அதிக அளவில் டாஸஸ்மாக் கடைகளில் திரண்டு வந்து மதுபானங்களை வாங்கி சென்றனர்.

மாவட்டத்தில் வழக்கமாக தினமும் ரூ.3 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாகி வருகின்றன. கடந்த 9-ந் தேதி மொத்தம் ரூ.6 கோடியே 20 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையானது. இதில் 2 ஆயிரத்து 200 பீர் பெட்டிகளும், 9 ஆயிரத்து 800 பெட்டி இதர மதுபானங்களும் விற்பனையான.

நேற்று முன்தினம் அதிகபட்சமாக ரூ.9 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. இதில் 1200 பீர் பெட்டிகளும், 13 ஆயிரம் பெட்டி இதர மதுபானங்களும் விற்பனையாகி உள்ளன. கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.15 கோடியே 20 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் 176 பேர் கைது

ஸ்டொ்லைட் ஆலையில் முழுமையான ஆக்சிஜன் உற்பத்தி எப்பொழுது?

  • Share on