தூத்துக்குடியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட வங்கி அதிகாரி, 17 வயது மாணவர், உட்பட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில், மாவட்டத்தில் நேற்று புதிய உச்சமாக 855 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், மொத்த பாதிப்பு 28,200 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வங்கி அதிகாரி, 17 வயது பிளஸ் 2 மாணவர், ஒரு பெண் என 3 பேர் இன்று அதிகாலை உயிரிழந்தனர்.
கொரோனாவால் இதுவரை 165 போ் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனா்.