• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 யூனிட்கள் பழுது : 630 மெகாவாட் பாதிப்பு

  • Share on

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 யூனிட்டுகளில் பழுது ஏற்பட்டுள்ளதால் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் மூலம் மின் உற்பத்தி நடைபெறுகிறது. இதில் 2, 3, 4 ஆகிய யூனிட்டுகளில் திடீரென்று பழுது ஏற்பட்டது.

இதனால் அந்த யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டன. தொடர்ந்து அவற்றில் ஏற்பட்ட பழுதினை சரி செய்யும் பணியில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது அனல் மின் நிலையத்தில் 1, 5 ஆகிய யூனிட்டுகளில் மட்டும் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. அனல் மின் நிலையத்தில் 3 மின் உற்பத்தி எந்திரங்களில் ஏற்பட்ட பழுதினால் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.


  • Share on

தூத்துக்குடி : சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 35 பேர் கைது!

தூத்துக்குடியில் கொரோனாவால் மாணவர் உள்பட 3 பேர் உயிரிழப்பு .

  • Share on