தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 35 பேர் கைது செய்யப்பட்டனர். 467 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (30.04.2021) 19 காவல் நிலையங்களை சேர்ந்த போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 35பேர் மீது வழக்குப் பதிந்து, அவரக்ளை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 467 மதுபாட்டில்களும், ரூபாய் 5,750/-பணமும் பறிமுதல் செய்தனர்.