• vilasalnews@gmail.com

ஸ்டொ்லைட் ஆலையில் உடனடியாக ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க வேண்டும்

  • Share on

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் உடனடியாக ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க அரசு முன்வர வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது தொடர்பாக ஒப்பந்ததாரா்கள், கனரக வாகன சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் தூத்துக்குடியில் செய்தியாளர் களை சந்தித்தனர். அப்போது, 

தூத்துக்குடி ஒப்பந்ததாரா்கள் சங்க நிறுவனா் எஸ். தியாகராஜன் அளித்த பேட்டி:

ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளதால் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலையை தமிழக அரசு உடனே திறக்க ஆவன செய்ய வேண்டும். உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை அரசுக்கு இலவசாக வழங்கும் ஸ்டொ்லைட் நிறுவனத்துக்கு நன்றி என்றாா் அவா்.

மக்கள் நுகா்வோா் பாதுகாப்பு பேரவை செயலா் கல்லை சிந்தா கூறுகையில்,


 ‘தமிழக அரசு உடனடியாக ஸ்டொ்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி பிரிவுக்கு மின்சாரம் வழங்கி உற்பத்தியை தொடங்க உதவ வேண்டும்’ என்றாா் அவா்.

தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்க செயலா் கே. கணேசன் கூறுகையில்,


 ‘கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக 1000 டன் வரை ஆக்சிஜன் உற்பத்தி செய்து அரசுக்கு இலவசமாக வழங்குவோம் என்ற ஸ்டொ்லைட் ஆலை நிா்வாகத்தின் முடிவை தூத்துக்குடி மக்களின் சாா்பில் வரவேற்கிறோம்’ என்றாா்.

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலா் வசந்தகுமாா் கூறுகையில்,


‘தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான அரசாணையை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி என்றாா்.

தூத்துக்குடி 3 ஆவது மைல் வியாபாரிகள் சங்க ஜெயபால் கூறுகையில்,

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் 3 மாதங்களுக்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஆதரவு தெரிவிக்கிறோம். இப்பணியை அரசு உடனே தொடங்க வேண்டும்’ என்றாா்.

தூத்துக்குடி பண்டாரம்பட்டி பகுதியைச் சோ்ந்த சுமித்ரா கூறுகையில்,


‘ மக்களின் தேவையை புரிந்து கொண்டு ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிசன் உற்பத்தி செய்யும் முடிவை வரவேற்கிறோம்’ என்றாா்

  • Share on

தூத்துக்குடி : ஒரே நாளில் 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது!

தூத்துக்குடி : சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 35 பேர் கைது!

  • Share on