ஒட்டப்பிடார தொகுதியில் அதிமுக வேட்பாளர் மோகன் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.
அவர் இன்று ( 15.3.2021 ) பிற்பகல் , 12:05 மணியளவில் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், தனது வேட்புமனுவை ஒட்டப்பிடார தொகுதி தேர்தல் அலுவலர் செல்வநாயகம் அவர்களிடம் தாக்கல் செய்தார்.
முன்னதாக வேட்புமனு தாக்கலுக்கு வருகை தந்த வேட்பாளர் ஓட்டப்பிடாரம் பஜார்ரிலிருந்து முப்பிலிவெட்டி வரை மேள தாளங்கள் முழங்க, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் திரண்டு ஆரவாரத்துடன் உற்சாகமாக வந்தனர்.