• vilasalnews@gmail.com

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்

  • Share on

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் பானு பிருந்தாவன் ஹோட்டலில் நடந்தது. 

கூட்டத்திற்கு மாநில ஐ.என்.டி.யூ.சி செயல் தலைவரும் வடக்கு மாவட்ட த.மா.க தலைவருமான பி.கதிர்வேல் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட பாஜக தலைவர் பால்ராஜ், பாமக மாவட்ட தலைவர் சின்னதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் கலந்து கொண்டு அதிமுக கூட்டணி கட்சியான தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி த.மா.க வேட்பாளர் எஸ்.டி.ஆர். விஜயசீலனை அறிமுகம் செய்து சிறப்புரை ஆற்றினார். 

கூட்டத்தில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி த.மா.க வேட்பாளர் எஸ்.டி.ஆர். விஜயசீலன் பேசியதாவது, தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்த ஜி.கே.வாசன் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அதிமுகவின் வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்தில் எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய கேட்டுக்கொள்கிறேன். தூத்துக்குடி தொகுதியில் உள்ள 60வது வார்டுகளில் செயலாளர்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகளோடு சேர்ந்து ஒற்றுமையோடு பணியாற்றி என்னை வெற்றி பெற செய்யவேண்டும். 

தூத்துக்குடி தொகுதி மக்கள் என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுத்தால் , தூத்துக்குடி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க விவிடி சிக்னலில் மேம்பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பேன். மேலும் 1,2 வது ரயில்வே கேட்டுகளில் சுரங்கப்பாதை அமைப்பது, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை வேகபடுத்தி நிறைவு செய்யவும், தூத்துக்குடி நகரில் மழைநீர் தேங்காதவண்ணம் மழைநீர் வடிகால் பணிகள் வேகப்படுத்தவும், புறவழிபேருந்து நிலையம் அமைக்கப்படும். ஏழை மாணவர்கள் இட ஒதுக்கீட்டில் பயன்பெறும் வகையில் அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.

தூத்துக்குடி நகரின் வளர்ச்சிக்காக  வெளித்துறைமுக பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுப்பேன். உப்பள தொழிலாளர்களுக்கு வேலையில்லாத காலங்களில் நிவாரணத்தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் மீனவர்களின் நிவாரணத்தொகை 10 ஆயிரமாக அதிகரிக்கப்படும். சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக இருப்பேன். தூத்துக்குடி மக்களின் குறை தீர்க்க விடுமுறையே இல்லாத அலுவலகமாக எனது எம்.எல்.ஏ. அலுவலகம் செயல்படும் என்று தெரிவித்தார்.

கூட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் அலுவலக லாரன்ஸ், அதிமுக நிர்வாகிகள் பெருமாள்சாமி, இரா.அமிர்த கணேசன், ஆறுமுக நயினார், சுதாகர், யூ.எஸ்.சேகர், வழக்கறிஞர் செல்வகுமார், நடராஜன், ஜோதிமணி, அக்ரி பெருமாள், செரினா பாக்யராஜ், குருத்தாய், திருப்பாற்கடல், பி.என். ராமகிருஷ்ணன், பொன்ராஜ், நட்டார் முத்து, பாஜக நிர்வாகிகள் சசிகலா புஷ்பா, விவேகம் ரமேஷ், வழக்கறிஞர்கள் மகேந்திரன், எஸ்.பி.வாரியார் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ‌

  • Share on

கோவில்பட்டியில் தினகரன் போட்டியிடுவது ஏன்? வெளியான புதிய தகவல்

விளாத்திகுளம் தொகுதி அதிமுக வேட்பாளர் சின்னப்பன் வேட்புமனுத் தாக்கல் செய்தார்

  • Share on