தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தேமுதிகவினர் பாஜகவில் இணைந்தனர்.
தூத்துக்குடி பாஜக வடக்கு மாவட்ட சிறுபான்மை அணி மாவட்ட பொது செயலாளர் ஜெயக்குமார் தலைமையில், வடக்கு மாவட்ட தலைவர் போத்தி ராமமூர்த்தி முன்னிலையில், தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தேமுதிகவினர் அக்கட்சியில் இருந்து விலகி தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில், பாஜக மாவட்ட பொது செயலாளர் கிஷோர் குமார், சரவணகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் அமுதாகணேசன், மாவட்ட அரசு தொடர்பு பிரிவு தலைவர் சரவணன், மாவட்ட சமூக ஊடக பிரிவு மாவட்ட துணை தலைவர் போத்தி ராஜா, மாவட்ட பொருளாதார பிரிவு துணை தலைவர் செல்வராஜ், மாவட்ட ஓபிசி அணி பொது செயலாளர் சரவணகுமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பிரபு, ஒன்றிய தலைவர்கள் பாலகிருஷ்ணன், இளங்கோ, மற்றும் கட்சி நிர்வாகிகள், மண்டல பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.