சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்த வேட்பாளர் கீதாஜீவனுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நடைபெற உள்ள சட்டமன்ற தோ்தலில் தி.மு.க சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கீதாஜீவன், விளாத்திக்குளம் தொகுதியில் போட்டியிடும் ஜிவி மார்க்கண்டேயன் ஆகியோர் சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று தூத்துக்குடி வந்தனர். அவர்களுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் கீதாஜீவன் தலைமையில் தொண்டர்கள் ஊர்வலமாக புறப்பட்டு நகரில் உள்ள தேவா், அம்பேத்கா், பெரியார், பேரறிஞா் அண்ணா, குரூஸ்பா்னாந்து சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.
வீரவாள்
அதனைத் தொடர்ந்து, பிரையண்ட் நகர் திமுக பகுதி கழகம் சார்பில், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன் கீதாஜீவன் எம்எல்ஏ விற்கு வீரவாள் வழங்கி வரவேற்பு அளித்தார்.
அதனையடுத்து, தொண்டர்கள் மத்தியில் பேசிய "கீதாஜீவன் எம்எல்ஏ, தமிழகத்தில் அடிமை ஆட்சி அகற்றப்பட்டு ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமைய வேண்டும்" என்று பேசினார். பின்னர் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள காந்தி, வ.உ.சி சிலைகளுக்கும், பீச்ரோட்டிலுள்ள இந்திராகாந்தி மற்றும் வ.உ.சி மார்கெட் அருகிலுள்ள காமராஜ் சிலைக்கும் மாலை கீதாஜீவன் எம்எல்ஏ மாலை அணிவித்தார்.
பின்னர் கலைஞா் அரங்கம் சென்று கருணாநிதி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தனது தந்தையார் என்.பெரியசாமி அவா்களின் நினைவிடத்தில் மலா் அஞ்சலி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், துணை்ச செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாவட்ட நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் மோகன்தாஸ் சாமுவேல், ஆனந்த கபேரியல், மணிகண்ட ராஜா, மீனவர் அணி அந்தோணி ஸ்டாலின், ஆர்தர் மச்சாது, கிறிஸ்டோபர் விஜயராஜ், கோட்டுராஜா, சுரேஷ்குமார், பாலசுப்பிரமணியன், கீதாமுருகேசன், கீதா மாரியப்பன், மதிமுக முருகபூபதி, நக்கீரன் தர்மம், பொன்ராஜ் சுந்தர்ராஜ், மகராஜன், தமிழக வாழ்வுரிமை கட்சி கிதர் பிஸ்மி, மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.