ஆழ்வார்திருநகரி அருகே உள்ள சேதுக்குவாய்த்தான் ஊராட்சியில் நடைபெறும் வீரவிளையாட்டு பயிற்ச்சி அனைவரும் பயன்படுத்தி கொண்டு பயன்பெறுமாறு ஊராட்சி மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம், சேதுக்குவாய்த்தான் ஊராட்சியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பம் மற்றும் கராத்தே விளையாட்டுகளை, பயிற்சியாளரும் ஆசிரியருமான குரும்பூர் ஸ்டீபன் கற்றுக்கொடுக்கிறார்.
வாரத்தில், சனி மற்றும் புதன்கிழமை இரு நாட்கள் இரவு ஏழு மணி முதல் தாமிரபணி நதிக்கரையோரம் நடைபெறும் இந்த வீர விளையாட்டு பயிற்சியை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி, பயன்பெற்று கொள்ளுமாறு சேதுக்குவாய்த்தான் ஊராட்சி மன்றம் சார்பாக அதன் தலைவர் சுதாசீனிவாசன் தலைவர் தெரிவித்துள்ளார்.