ஒட்டப்பிடாரம் பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 372 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 653 பெண் வாக்காளர்களும் 28 திருநங்கைகளும் என மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரத்து 53 வாக்காளர்கள் உள்ளனர்.
2006 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதன் முதலில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்ட மோகன் வெற்றி பெற்று, முதல் முறையாக ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அதனையடுத்து, 2016 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுந்தரராஜன்,
பின்னர் அமமுகவுக்குச் சென்றதால், பதவி பறிக்கப்பட்டு, கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில்
அதிமுக சார்பில் மோகனுக்கு இரண்டாவது முறை வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அத்தேர்தலில் திமுகவைச் சேர்ந்த சண்முகையா வெற்றி பெற்று தற்போது ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற உறுப்பினராக உள்ளார்.
இந்நிலையில், இடைத்தேர்தலில் தோல்வியை தழுவினாலும், மூன்றாவது முறையாக ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு அதிமுக சார்பில் போட்டியிட மோகனுக்கு தலைமை மீண்டும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது.
கடந்த தேர்தலில் அடைந்த தோல்விக்கான காரணத்தை அலசி ஆராய்ந்து கண்டறிந்து, 2021 ம் ஆண்டு நடைபெறும் இந்த சட்ட மன்ற தேர்தவில் தனக்கு வழங்கப்பட்ட இந்த பொன்னான வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, வெற்றி பெற்று மீண்டும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்பதில் மிக கவனமாக மோகன் இருந்து தேர்தல் பணியாற்றி வருவதாக விபரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
திமுக தரப்பில் மீண்டும் நடப்பு எல்எல்ஏ சண்முகையாவே ஒட்டப்பிடாரத்தில் களம் இறக்கப்பட்டு இருக்கிறார் இதனால் தொகுதி அனல் பறக்கும் என்கிறார்கள் தொகுதி வாசிகள்.
இடைத் தேர்தலில் விட்ட வெற்றி வாய்ப்பை, கவனமாக தேர்தல் களமாடி வெற்றியை எட்டும் முனைப்பில் செயல்பட்டுவரும் மோகனின் தேர்தல் களப்பணி எந்த அளவிற்கு பயன்தரப்போகிறது என்பது போகபோகத்தான் தெரியும்.