திருச்செந்தூர் தொகுதியில் அசைக்க முடியாத வேட்பாளராக விளங்கி வரும் திமுகவைச் சேர்ந்த சிட்டிங் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன், திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2001, 2006 ஆகிய இரு முறை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பிலும், 2010 இடைத்தேர்தல், 2011, 2016 ஆகிய மூன்று முறை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ் நாடு சட்டமன்ற மன்ற உறுப்பினராக, தேர்ந்தெடுக்கப் பட்டு தொகுதியை 20 ஆண்டுகளாக தன்வசம் வைத்து வருகிறார்.
திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதா கிருஷ்ணனை தோற்கடிக்க வேண்டும் என்றால் இன்னொரு ராதாகிருஷ்ணன் தான் பிறந்து வர வேண்டும் என ஒரு கட்சி கூட்டத்தில் பேசியதாகவும், அவர் எதை நினைத்து பேசியிருந்தாரோ தெரியவில்லை, 2021 ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் அதிமுக சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட தலைமை எனக்கு வாய்ப்பளித்தால், அனிதா ராதா கிருஷ்ணன் தன்னை தோற்கடிக்க இன்னொரு ராதாகிருஷ்ணன் பிறக்க வேண்டும் என்று கூறிய அந்த ராதாகிருஷ்ணன் நான் தான் என்பதில் மாற்றமில்லை என கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
அதுபோலவே, திருச்செந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளராக கட்சி தலைமை கே.ஆர்.எம்.ராதா கிருஷ்ணனை அறிவித்திருக்கிறது. கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் கூறியது போல அனிதா ராதா கிருஷ்ணனை தோற்கடிக்க பிறந்திருக்கும் இன்னொரு ராதாகிருஷ்ணன் இந்த கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் என்பதை நிருபித்து காட்டுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.