அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தூத்துக்குடி தொகுதி ஒதுக்கப்பட்டு வேட்பாளராக எஸ்டிஆர். விஜயசீலன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படாமல் இருந்தது. இதனால் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்பாளராக எஸ்டிஆர். விஜயசீலன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சுயவிபரம்
பெயர்: எஸ்.டி.ஆர்.விஜயசீலன்
பெற்றோர் : S. தர்மராஜ் நாடார் அம்மா: D. சொர்ணமணி
பிறந்த இடம்: தூத்துக்குடி தாலுகா தூத்துக்குடி மாவட்டம்
பிறந்த தேதி: 09.02.1972
மதம்/ஜாதி : கிறிஸ்துவர் நாடார்
கல்வித்தகுதி: B.Sc
குடும்ப விபரம்: மனைவி: V. ரீனாசீலன்; மகன் : V. அஜய் டேனியல் சாம்ராஜ் 12th Std
தற்போதைய முகவரி: 07/18D/11,முதல் தெரு, பால்பாண்டி நகர், மில்லர்புரம் தூத்துக்குடி - 628 00
மாற்று முகவரி: 18 67/B, சிவந்தாக்குளம் ரோடு தூத்துக்குடி - 628 002
தொழில்: கட்சிப்பணி, கல்விப்பணி, விவசாயம் மற்றும் உற்பத்தி
அரசியல் : மாணவர் காங்கிரஸ் தலைவர், இளைஞர் காங்கிரஸ் தலைவர்,
கட்சி கட்சியில் தற்போதைய பதவி : தமிழ் மாநில காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர்