கோவில்பட்டியில் அமமுக சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார்.
அம்மா மக்கள் முன்னற்ற கழகம் கட்சியின் இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார்.
இத்தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தற்போது டிடிவி தினகரன் களமிறங்குகிறார். திமுக வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்பட உள்ளார்.
மேலும், அம்மா மக்கள் முன்னற்ற கழகம் சார்பில் விளாத்திகுளம் தொகுதியில் சீனிசெல்வி (தூத்துக்குடி மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்), கன்னியாகுமரியில் (கிழக்கு மாவட்ட செயலாளர்) செந்தில் முருகன், நாகர்கோவிலில் ரோஸ்லின் அமுதராணி என்ற அம்மு ஆண்ட்ரோ (கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர்)உட்பட 50 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.