விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தேர்வின் மூலம், தொகுதியின் வெற்றியை அதிமுக உறுதி செய்து இருப்பதாக அதிமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தொகுதி பங்கீடு கிட்டத்தட்ட முடிந்து, வேட்பாளர் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, 2021 சட்டமன்ற தேர்தல் களம் கூடுதல் சுறுசுறுப்பு அடைத்துள்ளது. மார்ச் 10 ம் தேதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், மார்ச் 12ம் தேதிக்குள் முழு வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் எனக்கூறிய முதல்வர் பழனிச்சாமி, வேட்பாளர் அறிவிப்பில் திமுகவை பின்னுக்கு தள்ளி அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை மார்ச் 10ம் தேதி அறிவித்து அதிரடி காட்டியிருக்கிறார்.
இதில், அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட வேட்பாளர்களின் தேர்வே, எடப்பாடியாரின் ஆளுமையை பறைசாற்றுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
விளாத்திகுளம் தொகுதிக்கு அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கும் நடப்பு எம்எல்ஏ சின்னப்பன், 1980 களிலே கட்சியின் அடிப்படை உறுப்பினராக அதிமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியவர் கிளைச்செயலாளர், மாவட்ட மாணவரணி அமைப்பாளர், கழக இலக்கிய அணி இணைச்செயலாளர் என கட்சியில் தொடர் வளர்ச்சி பொறுப்புகளை வகித்ததோடு, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர், 2006,2019 ம் ஆண்டு என இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர் என மக்கள் பிரதிநிதியாய் மக்களுக்கான பொதுப்பணியிலும், பதவிகளிலும் உயர்ந்து இன்று அதிமுகவின் எஃகு கோட்டையான விளாத்திகுளம் தொகுதியை தக்க வைக்க மூன்றாவது முறையாக விளாத்திகுளம் தொகுதிக்கு அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
ஆகவே, விளாத்திகுளம் தொகுதிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக சின்னப்பன் அறிவிக்கப்பட்டதிலேயே விளாத்திகுளம் தொகுதி வெற்றியை அதிமுக உறுதி செய்து விட்டதாக விளாத்திகுளம் தொகுதி முழுவதும் பேச்சுக்கள் அடிபட தொடங்கி யிருக்கிறது. அதிமுகவினரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.