• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்ட அதிமுக வேட்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பு

  • Share on

வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட பின் முதன்முதலாக, சொந்த மாவட்டத்திற்கு வருகை தந்த 5 சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர்களுக்கு, தூத்துக்குடி விமான நிலையத்தில் கட்சியினர் பெருந்திரளாக வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 6 வேட்பாளர்களின் பட்டியல் ஏற்கனவே வெளியானது, அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் இடம் பெற்றிருந்தன.

இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியல் நேற்று வெளியானது. அதன்படி, 171 வேட்பாளார்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

அதேபோல், கூட்டணிக் கட்சிகளான பாஜக, பாமக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப் பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 176 தொகுதிகளில் அதிமுக களம் காண்கிறது. 20 தொகுதிகளில் பாஜக, 23 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் களை அதிமுக அறிவித்துள்ளது. மீதமுள்ள தூத்துக்குடி தொகுதிக்கு மட்டும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், கோவில்பட்டி தொகுதிக்கு அமைச்சர் கடம்பூர் ராஜுவும், ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு சண்முகநாதன் எம்எல்ஏவும், விளாத்திகுளம் தொகுதிக்கும் சின்னப்பன் எம்எல்ஏ வும், ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு முன்னாள் எம்எல்ஏ மோகனும், திருச்செந்தூர் தொகுதிக்கு கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணனும் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட பின் முதன்முதலாக  சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த ,  சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களுக்கும் தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளானோர் வந்து தூத்துக்குடி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

  • Share on

தூத்துக்குடி பெருமையை அ.தி.மு.க, த.மா.கா பாதுகாக்குமா?

வேட்பாளர் அறிவிப்பின் மூலம் விளாத்திகுளம் தொகுதி வெற்றியை உறுதி செய்த அதிமுக - கட்சியினர் உற்சாகம்

  • Share on