இந்தியா சுந்திரம் அடைந்து 73 ஆண்டுகளை கடந்த தமிழகத்தில் வரும் 16வது சட்டமன்ற பொதுதேர்தலை எதிர்கொள்ள அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் தயாராகி வருகின்றன.
அடுத்த மாதம் 6ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வரும் 12ம் தேதி நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ளது. அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணி கட்சிகளும் தொகுதிகளை வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், மாவட்ட குற்றவியல் அரசு வழக்கறிஞர் ஆன்ட்ருமணி, ஊராட்சிமன்ற துணைத்தலைவர் செல்வகுமார், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், கீழுர் கூட்டுறவு வங்கி தலைவர் ஞானராஜ், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவரும், வடக்கு ஒன்றியச்செயலாளருமான லெட்சுமணப்பெருமாள் உள்பட பலர் விருப்பமனு அளித்திருந்தன. மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் தலைநகர் யாருக்கு என்ற கேள்விக்குறி எழுந்துள்ள சூழ்நிலையில் தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த காலத்தில் தூத்துக்குடி நகர்மன்ற தலைவர் தேர்தலில் திமுக-வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தொழிலதிபர் தனராஜ் தோல்வியை தழுவினார்.
அப்போது மூப்பனார் இருந்த காலம் அதன் பின் பல்வேறு காலக்கட்டங்கள் மாறியப்பின்பு மத்திய அமைச்சரவையில் அமைச்சராக இருந்த வாசன் சிலகாரணங்களினால் காங்கிரஸிலிருந்து விலகி மீண்டும் தந்தை வழியில் தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பித்து நடைபெற்ற பொது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட இடத்தில் தோல்வி அடைந்தது.
இதற்கு முன்பும் 2016 நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் எந்த ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதற்கிடையில் மீண்டும் மேல்சபை எம்.பி-யாக அதிமுக ஆதரவோடு கடந்த வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.
தென்மாவட்டத்தில் அதிக அளவில் அவருக்கு ஆதரவாளர்கள் இல்லையென்றாலும், தூத்துக்குடியில் இருக்கும் நபருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா இருந்த காலத்தில் நடைபெற்ற 2016 தேர்தலில் திருவைகுண்டம், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் வாக்கு வித்தியாசம் என்னவென்று பலருக்கும் தெரியும். தற்போதைய சூழ்நிலை ஜெயலலிதா இல்லாத தேர்தல் கூட்டணி மாற்றம் என பல வகைகள் உருமாறிக் கிடக்கின்றன. தொகுதியிலேயே இருந்து. பணியாற்றியவரின் நிலைமை என்னவென்று புரியாமல் தூத்துக்குடி தொகுதியை தாரை வார்க்க நினைக்கும் தலைமை மறுபரிசீலனை செய்யுமா? வாசனும் வழி விடுவரா? 6 முறை தொடர்ந்து அதிமுக வெற்றி பெற்ற தொகுதி இந்த மாவட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் நிறைந்த புண்ணிய பூமியில் அதிமுக எண்ணிய திட்டங்களை நிறைவேற்ற அதிமுக போட்டியிட வேண்டும்.
அப்போது தான் திமுக-விற்கு கடுமையான நெருக்கடியை கொடுக்க முடியும். இல்லையேல் திமுக எளிதில் வெற்றி பெற்றுவிடும். இதற்கு முடிவு கட்ட அதிமுக, த.மா.கா தலைவர்கள் இணைந்து முடிவெடுக்க முன் வருவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.