தூத்துக்குடி மாவட்டத்தில், தூத்துக்குடி தவிர மற்ற 5 தொகுதிகளுக்கும் அதிமுக வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் ஏற்கனவே அதிமுக முதல் வேட்பாளர் பட்டியலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி வேட்பாளராக சிட்டிங் எம்எல்ஏ வான தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் 4 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டன. இதில் ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு முன்னாள் எம்எல்ஏ மோகன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரின் சுயவிபரம்
பெயர் - மோகன்
தந்தை பெயர் - பெருமாள்
ஊர் - 1/89, கிழக்கு தெரு, கவர்னகிரி, வெள்ளாரம், ஒட்டப்பிடாரம் தாலுகா, தூத்துக்குடி மாவட்டம்.
பிறந்த வருடம் - 12/03/1976
மனைவி பெயர் - கனகலெட்சுமி
மகன் - சக்கரவர்த்தி
மகள் - பிரவினா
கல்வித்தகுதி - பி.எஸ்.சி.,
தற்போது அதிமுக ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியச் செயலாளராகவும், மாவட்ட அறங்காவலர் குழு தலைவராகவும் உள்ளார்.
1998 - 2004 : ஒட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர்
2004 - 2016 : மாவட்ட மாணவரணி இணைச்செயலாளர்
2006 - 2011 : ஒட்டப்பிடாரம் தொகுதி எம்எல்ஏ
2016 - 2020 : மாவட்ட துணைச்செயலாளர்