• vilasalnews@gmail.com

தூத்துக்குடி தொகுதி மும்முனை போட்டியில் முந்தப்போவது யார்?

  • Share on

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் ( 12ம் தேதி) துவங்குகிறது.

கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை பெரிய சிக்கலின்றி முடித்துள்ள ஆளும் கட்சியில், சீட்டுக்கு மல்லுக்கட்டு  அதிகமாவே நடந்து வருகிறது. விரும்ப மனு செய்த 8 ஆயிரத்திற்கும் அதிகமானோரிடம் ஒரே நாளில் நேர்காணல் முடித்து, தொகுதிக்கு 3 பேரை அதிமுக தலைமை தேர்வு செய்து வைத்துள்ளது.

இதனையடுத்து, அதிமுகவின் இரண்டாம் கட்ட மற்றும் முழு வேட்பாளர் பட்டியல் வரும் 12ம் தேதிக்குள் அறிக்கப்படும் என இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான பழனிச்சாமி அறிவித்திருந்தார். ஆகவே, இன்றோ, நாளையோ அதிமுகவின் முழு வேட்பாளர் பட்டியல் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சரும், அமைப்புச் செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன், கீழுர்கூட்டுறவு வங்கி தலைவரும், முன்னாள் ஒருங்கிணைந்த மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணைச்செயலாளருமான எஸ்.டி.எஸ்.ஞானராஜ், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவரும், வடக்கு ஒன்றியச்செயலாளருமான லெட்சுமணப்பெருமாள் ஆகியோர் இடையே கடுமையான மும்முனை வேட்பாளர் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. மேலும், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் முள்ளக்காடு செல்வக்குமார், மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர் ஆன்ட்ரூ மணி, அமிர்த கணேசன், ஏசாதுரை உள்ளிட்ட பெயர்களும் தெற்கு மாவட்ட செயலாளர் தரப்பில் அதிமுக தலைமைக்கு பரித்துரை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் மும்முனைப் போட்டியில் உள்ள யாராவது ஒருவர் பெயரையே அதிமுக தலைமை டிக் அடிக்க கூடும் என அதிமுக தலைமை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Share on

கோவில்பட்டி அருகே இளம்பெண் மாயம்!

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சின்னப்பன்

  • Share on