• vilasalnews@gmail.com

கொலையான காவலர் குடும்பத்திற்கு 30 லட்சத்திற்கான வங்கி வரைவோலை : எஸ்பி., வழங்கினார்

  • Share on

தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட முதல் நிலை காவலர் புங்கலிங்கம் குடும்பத்திற்கு ஆக்ஸிஸ் பேங்க் சார்பாக விபத்து காப்பீட்டு தொகை 30 லட்சத்திற்கான வங்கி வரைவோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வழங்கி ஆறுதல் கூறினார்.

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் பணியாற்றிய தெய்வத்திரு. புங்கலிங்கம் என்பவர் கடந்த 10.06.2020 கொலை செய்யப்பட்டார். மேற்படி புங்கலிங்கம் என்பவர் ஆக்ஸிஸ் வங்கி கணக்கின் மூலம் சம்பளம் பெற்று வந்தார். இந்த வங்கி கணக்கின் மூலம் சம்பளம் பெற்று வந்த அவருக்கு, அந்த வங்கி சார்பாக விபத்து காப்பீடு செய்திருந்தது. அந்த விபத்து காப்பீட்டுத் தொகை ரூபாய் 30 லட்சத்திற்கான வங்கி வரைவோலையை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று (10.03.2021) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் புங்கலிங்கம்  மனைவி காசியம்மாளிடம் இன்று (10.03.2021) வழங்கினார்.

இந்நிகழ்வில்,  ஆக்ஸிஸ் வங்கியின் சார்பாக கோயம்புத்தூர்  வங்கி தலைவர் சக்திவேல், திருநெல்வேலி வங்கி தலைவர் ஷஜி ஜான், கோயம்புத்தூர் சம்பளபிரிவு தலைவர்  கலைவாணி, தூத்துக்குடி வங்கியின் கிளை தலைவர்  கார்த்திகேயன், தூத்துக்குடி விக்டோரியா ரோடு வங்கி கிளை தலைவர் உதயா சங்கர், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

  • Share on

எப்போதும்வென்றான் அருகே சிறுவன் நீரில் மூழ்கி பலி!

கோவில்பட்டி அருகே இளம்பெண் மாயம்!

  • Share on