எப்போதும்வென்றான் அருகே குளத்தில் குளித்த 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
தூத்துக்குடி மாவட்டம் எப்போது வென்றான் அருகே உள்ள கீழ செய்தலை கிராமம், கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவரது மகன் அகிலேஷ் (7). அங்குள்ள பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில், நேற்றைய தினம் அகிலேஷ் தனது அக்காவுடன் அங்கு உள்ள குளத்தில் குளிக்கச் சென்றுள்ளான். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற அச்சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து எப்போதும்வென்றான் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.