• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்கள் யார்?

  • Share on

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் ( 12ம் தேதி) துவங்குகிறது.

ஆளும் கட்சியான அதிமுக, முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த 5ம் தேதி வெளியிட்டது. அதில், கட்சி ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான பழனிச்சாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முக நாதன், நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி உள்ளிட்ட 6 பேர் இடம்பெற்றிருந்தனர்.

திமுக வேட்பாளர் பட்டியல் இன்று ( மார்ச் 10ம் தேதி )வெளியிடப்படும் என அக்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை பெரிய சிக்கலின்றி முடித்துள்ள ஆளும் கட்சியில், சீட்டுக்கு மல்லுக்கட்டு  அதிகமாவே நடந்து வருகிறது. விரும்ப மனு செய்த 8 ஆயிரத்திற்கும் அதிகமானோரிடம் ஒரே நாளில் நேர்காணல் முடித்து, தொகுதிக்கு 3 பேரை அதிமுக தலைமை தேர்வு செய்து வைத்துள்ளது.

இதனையடுத்து, அதிமுகவின் இரண்டாம் கட்ட மற்றும் முழு வேட்பாளர் பட்டியல் வரும் 12ம் தேதிக்குள் அறிக்கப்படும் என இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான பழனிச்சாமி அறிவித்திருந்தார். ஆகவே, இன்றோ, நாளையோ அதிமுகவின் முழு வேட்பாளர் பட்டியல் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அதிமுகவில்,  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 5 தொகுதிகளில் ஒரு தொகுதி கூட்டணி கட்சியான பாஜக விற்கு ஒதுக்கப்பட உள்ளது.

மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். இந்த வேட்பாளர் பட்டியலில் யார் பெயர் இடம்பெற போகிறது என விருப்பமனு அளித்து நேர்காணல் சென்று வந்தவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே பெரும்பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

இதில், நேர்காணல் முடித்து, தொகுதிக்கு 3 பேரை அதிமுக தலைமை தேர்வு செய்துள்ள பட்டியலில், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு சி.த.செல்லப்பாண்டியன், எஸ்.டி.எஸ்.ஞானராஜ், லெட்சுமணப் பெருமாள், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு பி.மோகன், மகாலெட்சுமி சந்திரன், கண்ணன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு பி.சின்னப்பன், காந்தி ( எ ) காமாட்சி, சத்தியா, திருசெந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு கே.ஆர்.எம். ராதா கிருஷ்ணன், வடமலை பாண்டியன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்று இருப்பதாகவும், இதில் திருச்செந்தூர் அல்லது தூத்துக்குடி தொகுதி கூட்டணி கட்சியான பாஜக விற்கு ஒதுக்கப்படலாம் என்று  அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் கள பரபரப்பில் இத்தகைய வேட்பாளர் பட்டியலின் பரபரப்பு இன்றோ,  நாளையோ முடிவு பெறும் என்பது மட்டும் உண்மை.

  • Share on

தூத்துக்குடி தொகுதியில் களம் இறங்கும் புது முக வேட்பாளர்? ஜெ., பாணியில் ஈபிஎஸ் அதிரடியா?

எப்போதும்வென்றான் அருகே சிறுவன் நீரில் மூழ்கி பலி!

  • Share on