• vilasalnews@gmail.com

தூத்துக்குடி தொகுதியில் களம் இறங்கும் புது முக வேட்பாளர்? ஜெ., பாணியில் ஈபிஎஸ் அதிரடியா?

  • Share on

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் அதிமுக, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை பிரித்து வழங்குவதில் மும்முரம் காட்டிக் கொண்டிருக்கிறது. அதே வேளையில், தங்களது கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதிலும், அதனை அறிவிக்கும் பணிகளிலும் அதிமுக தலைமை படுதீவிரமாக உள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு புதுமுக வேட்பாளரை ஜெ., பாணியில் ஈபிஎஸ் களம் இறக்கப்போவதாக  பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

1991 ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வி.பி.ஆர்.ரமேசும், 2001 நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராஜம்மாளும் அதிமுக வேட்பாளர்களாக ஜெயலலிதாவால் புதுமுகங்கள் களம் இறக்கப்பட்டு தூத்துக்குடி தொகுதியை அதிமுக வெற்றிக்கொண்டது.

எனவே 1991, 2001  போல 1 என்ற எண்ணில் முடியும் ஆண்டாக 2021 அமையப்பெறுவதால் இந்த சட்டமன்ற தேர்தலில் ஜெ., பாணியில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு புதுமுக வேட்பாளரை களம் இறக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு, அவ்வேட்பாளர்களுக்கான தேர்வில் மும்மரமாக இறங்கியுள்ளார்.

அதில், கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளரும், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவருமான லெட்சுமணப்பெருமாள் என்பவர், எடப்பாடி பழனிச்சாமியின் வேட்பாளர் தேர்வு பட்டியலில் முதல் இடம் வகித்து வருகிறார்.

மேலும், தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு என இரு மாவட்ட செயலாளர்களின் தேர்வும் இவராகவே உள்ளார் என்பது குறிபிடதக்கது. இதனையடுத்து, சென்னை தலைமையில் இருந்து வரப்பெற்ற அழைப்பைத் தொடர்ந்து தற்போது அவர் அதிமுக தலைமை அலுவலகத்தில் முகாமிட்டு இருப்பது குறிப்பிடதக்கது.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை அதிமுக, திமுக என இரு முன்னணி கட்சிகள் உட்பட பல பெரும்பாண்மையான அரசியல் கட்சிகள் நாடார் சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கோ அல்லது கிறிஸ்துவ நாடார் வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கி வந்திருப்பதுதான் தூத்துக்குடி தொகுதி மரபாக இருந்திருக்கிறது.

ஆனால், தற்போது அதிமுக சார்பில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் புதுமுக வேட்பாளராக, பிள்ளைமார் சமூகத்தைச் சார்ந்த லெட்சுமணப்பெருமாள் என்பவரை களம் இறக்க திட்டமிட்டு இருப்பதாக வெளியாகும் தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது அதிகாரபூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியாவதிலும், அவ்வாறு அவரை களம் இறக்கும் பட்சத்தில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு எவ்வாறு அமையும் என்பது மக்களின் மனதிலும், வாக்கு எண்ணிக்கை கணக்கில் மட்டுமே அடங்கியிருக்கிறது.

  • Share on

தூத்துக்குடியில் தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையத்தின் சார்பில் மகளிர் தின விழா

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்கள் யார்?

  • Share on