தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம், தமிழன்டா கலைக்கூடம் சார்பில் உலக மகளிர் தின விழா, பெண்களுக்கு நாட்டுப்புற பாட்டு போட்டி, சாதனை பெண்களுக்கு விருதுகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா தூத்துக்குடி தமிழன்டா கலைக்கூடத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில மகளிர் அணி துணைத் தலைவர் சண்முக குமாரி தலைமை தாங்கினார். திருநெல்வேலி வானொலி நிலையத்தின் அறிவிப்பாளர் முனைவர் கிராமத்து குயில் சந்திரபுஸ்பம் முன்னிலை வகித்தார்.
விழாவிற்கு தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையத்தின் டிரஸ்டிகள் ஆசிரியர் குப்புசாமி, ஆசிரியை முத்துலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு சாதனை படைத்த மங்கையருக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தனர்.
தூத்துக்குடி ஏபிசி மகளிர் கல்லூரி வரலாற்றுத் துறை தலைவர் முனைவர் சங்கீதா, காமராஜ் கல்லூரி பேராசிரியை முனைவர் பொன்னுத்தாய், அன்னம்மாள் கல்வியியல் கல்லூரி பேராசிரியை முனைவர் சுதா குமாரி, மதர் தெரசா பொறியியல் கல்லூரி நூலகர் கீதா, திருநெல்வேலி வானொலி நிலைய அறிவிப்பாளர் சந்திர புஷ்பம், துறைமுக அதிகாரி சண்முக குமாரி, சிறுமி சொர்ணா, ஜானகி குரு பேப்பர் உரிமையாளர் அமுதா, ஆசிரியை அன்றோ அணில், அந்தோணியார் புரத்தைச் சேர்ந்த குரூஸ் திவாகரன் மனைவி ஜோஸ்பின் சீபா உட்பட 15 பெண்களுக்கும்,பெண்களின் வளர்ச்சியில் உறுதுணையாக இருந்த பறை பயிற்சியாளர் சக்திவேல்,சிலம்பம் பயிற்சியாளர் மாரியப்பன்,சமூக ஆர்வலர் பிளட் ஜெயபால்,சிவசுப்பரமணியன், தமிழன்டா கலைக்கூட மாணவர் தலைவர் கார்த்திக் உட்பட 10க்கும் மேற்பட்ட ஆண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
தமிழ் பண்பாடு மேம்பாட்டு மைய இயக்குனர் எஸ் ஜெகஜீவன் வரவேற்புரையாற்றினார்.
மேலூர் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் கே வி என் சிவசுப்பிரமணியன், சமூக ஆர்வலர் பிளட் ஜெயபால், சிலம்பு ஆசிரியர் மாரியப்பன், பாக்சர் எம் லட்சுமண மூர்த்தி,சமத்துவ மக்கள் கழக மாநில இளைஞர் அணி துணை செயலாளர் குருஸ்திவாகரன் போன்றோர் வாழ்த்தி பேசினார்கள்.
ஆசிரியை ஆண்டோ அணில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தமிழன்டா கலைக்கூடத்தின் பயிற்சியாளர் சக்திவேல் நன்றியுரையாற்றினார்.
தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்ட பெண்கள் நாட்டுப்புற பாட்டு போட்டியில் , தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊரைச் சார்ந்த பி மஞ்சு முதல் பரிசு பெற்றார்.
தூத்துக்குடி மாவட்டம், குறுக்குச்சாலை ஷாலினி இரண்டாம் பரிசையும், திருச்செந்தூர் உமாமகேஸ்வரி மூன்றாவது இடத்தையும் பெற்றார். போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது. விழாவில் தமிழன்டா கலைக்குழுவின் கிராமியக் நிகழ்ச்சிகள் நடந்தது.