• vilasalnews@gmail.com

ஸ்ரீ சித்தர் பீடத்தில் வரும் 11ம் தேதி மஹா சிவராத்திரி விழா

  • Share on

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் வரும் 11ம் தேதி மஹா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெறுகிறது.

தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகேயுள்ள அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரில் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடம் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, ஸ்ரீமஹா காலபைரவர், அதிர்ஷ்ட விநாயகர், மங்களம் தரும் சனீஸ்வரர், குரு மகாலிங்கேஸ்வரர், நந்தீஸ்வரர், ஸ்ரீமகாலெட்சுமி, சரஸ்வதிதேவி, முனீஸ்வரர், தெட்சிணாமூர்த்தி சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

தென்தமிழகத்தில் குருபகவான் குருமகாலிங்கேஸ்வராக தனி சந்தியில் இங்கு மட்டுமே எழுந்தருளியுள்ளார் என்பது மிகவும் சிறப்பான அம்சமாகும். குரு மகாலிங்கேஸ்வரருக்கு ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இதன்படி இந்த ஆண்டிற்கான மஹா சிவராத்திரி விழா வரும் 11ம்தேதி (வியாழக்கிழமை) ‘சாக்தஸ்ரீ’ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது.

11ம் தேதி காலை 10மணிக்கு கணபதி, -நவக்கிரக ஹோமம், கோ பூஜை, மஹாலெட்சுமி ஹோமத்துடன் மஹா சிவராத்திரி விழா துவங்குகிறது. மாலை 6மணிக்கு நவக்கிர பூஜை, லலிதா சகஸ்ர நாமம், மஹாபூஜை-தீபாரதனையும், இரவு 9மணிக்கு மஹா சிவராத்திரி வழிபாடு பூஜைகளும், பூர்ணாகுதி, அபிஷேக அலங்கார தீபாரதனைகளும் நடைபெறுகிறது.

இரவு 10மணிக்கு ‘’பெற்றோருக்கு பெருமை சேர்த்து  அவர்களை பெரிதும் பேணிக்காப்பது மகனா..? அல்லது மகளா..? '' என்ற தலைப்பில் பேராசிரியர் செபாஸ்டின் தலைமையில் நகைச்சுவை வழக்காடு மன்றம் நடைபெறுகிறது.

தொடர்ந்து இரவு 12மணிக்கு மஹாஅபிஷேகம், தமிழ் மறையில் தேவார திருவாசக பாராயணமும், அதன்பின்பு அதிகாலை 2மணிக்கு சதுர்வேத பாராயணமும், அதிகாலை 4மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனை மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதலுடன் மஹா சிவராத்திரி விழா நிறைவடைகிறது.

மஹா சிவராத்திரி விழாவில் சிவபக்தர்கள், ஆன்மீக அன்பர்கள்  தவறாமல் பங்கேற்று குருமகாலிங்கேஸ்வரர் - நந்தி பகவானின் பேரருளை பெற்றுச்செல்லுமாறு ‘சாக்தஸ்ரீ’ சற்குரு சீனிவாச சித்தர் கேட்டுக்கொண்டுள்ளார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சித்தர் பீடத்தின் சுவாமிகள் ‘சாக்தஸ்ரீ’ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் விழாக்குழுவினர், மகளிரணியினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

  • Share on

ஆதனூர் மஹா சிவராத்திரி திருவிழா - டிஎஸ்பி பிரகாஷ் ஆய்வு

தூத்துக்குடியில் தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையத்தின் சார்பில் மகளிர் தின விழா

  • Share on