எப்போதும்வென்றான் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் நடைபெற இருக்கும் மஹா சிவராத்திரி திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து டிஎஸ்பி பிரகாஷ் கோவில்களில் ஆய்வு மேற்கொண்டார்.
விளாத்திகுளம் காவல் உட்கோட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, எப்போதும்வேன்றான் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆதனூர் கிராமத்தில் இருக்கும் ஆதிலிங்கேஸ்வரர் திருக்கோவில்களில் வருகிற 11.03.2021 அன்று மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகையை முன்னிட்டு, பக்தர்களின் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்தும், செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆதனூரில் இருக்கும் 2 கோவில்களிலும், விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் இன்று ( 8.3.2021 ) ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, எப்போதும்வென்றான் காவல்நிலைய உதவி ஆய்வாளர் முத்துமாலை உள்ளிட்ட காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.