• vilasalnews@gmail.com

தூத்துக்குடி : டிஜிபி ராஜேஷ்தாஸை கைது செய்ய வலியுறுத்தி மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

  • Share on

பாலியல் புகாருக்கு ஆளான தமிழக டிஜிபி ராஜேஷ்தாஸை கைது செய்யவும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் தூத்துக்குடி  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்பார்ட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத்தொடர்ந்து,  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது :

தமிழக டிஜிபி ராஜேஷ்தாஸ் அவர்கள் பெண் எஸ்பி அவர்களை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து புகார் கொடுக்க போன அவரை செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் தடுத்துள்ளார்.

இத்தகைய பாலியல் தொல்லை கொடுத்த டிஜிபி ராஜேஸ் தாஸ் மற்றும் புகார் கொடுக்க விடாமல் தடுத்த கண்ணன் இருவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தூத்துக்குடி அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில், மாவட்ட செயலாளர் பூமயில், மாவட்ட தலைவர் விஜயலெட்சுமி, மாவட்ட பொருளாளர் ராமலெட்சுமி, மாவட்ட துணைச் செயலாளர் கலைச்செல்வி, மற்றும் உலகமணி, செல்வி, கவிதா, சரோஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • Share on

ஓட்டப்பிடாரம் அருகே கானாமல் போன சாலையை மீட்டுதரக்கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

ஆதனூர் மஹா சிவராத்திரி திருவிழா - டிஎஸ்பி பிரகாஷ் ஆய்வு

  • Share on