ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குலசேகர நல்லூர் கிராமத்தில் கானாமல் போன மங்கம்மாள் சாலையை மீட்டுத்தரக்கோரி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இது தொடர்பாக குலசேகரநல்லூர் கிராம மக்கள் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது :
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் உள்ள குலசேகரநல்லூர் கிராமத்தில் வரலாற்று சிறப்புமிக்க மங்கமாள் சாலையை கானவில்லை. ஆகவே பாஞ்சாலங்குறிச்சி காலனியில் இருந்து, குலசேகரநல்லூர் கோவில்பட்டி நெடுஞ்சாலை வரை மங்கம்மாள் சாலையை எடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தர தாங்கள் விரைந்து நடவடிக்கை எடுத்திட கேட்டுக்கொள்கிறோம் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.