நம்ம ஊரு ஆரோக்கியபுரம் நண்பர்கள் குழு சாா்பில் தாளமுத்துநகா் தோமையாா் ஆலயம் முன்பு கொரோனா எதிா்ப்பு சக்தி மருந்தான கபசுர குடிநீா் வழங்கப்பட்டது.
நம்ம ஊரு ஆரோக்கியபுரம் குழு சார்பாக பொது மக்களுக்கு இன்று 08.03.2021 காலை கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதனை தாளமுத்துநகா் பங்கு தந்தை நெல்சன்ராஜ், உதவி பங்கு தந்தை ஸ்டீபன்மாியதாஸ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொது மக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கினர்.
இதில், தருவைக்குளம் காமராஜா் நற்பணி மன்ற அமைப்பாளா் லாரன்ஸ், மாப்பிள்ளையூரனி ஊராட்சி அன்னை தெரஸா நற்பணி மன்ற தலைவா் தொம்மை அந்தோணி, பொருளாளா் ஜெயராம், உதவி தலைவா் ஜெயசீலன், உதவி செயலாளா் முத்துக்குமாா், உட்பட பலா் கலந்து கொண்டனா்.