நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் உட்கோட்டம் எட்டையாபுரம் மற்றும் விளாத்திகுளம் பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் காவல்துறை மற்றும் துணை ராணுவபடையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.தூ
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற கொடி அணிவகுப்பானது விளாத்திகுளம் உட்கோட்டம் எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலவாசல், கீழ வாசல், அம்மன் கோவில தெரு வழியாக தூத்துக்குடி முதல் எட்டையாபுரம் பிரதான சாலை விளாத்திகுளம் ஜங்ஷன் வந்து நிறைவடைந்தது.
அதனை தொடர்ந்து விளாத்திகுளம் எல்லைக்குட்பட்ட விளாத்திகுளம் வைப்பாற்று பாலத்தில் தொடங்கி விளாத்திகுளம் பேருந்து நிலையம், மீனாட்சி அம்மன் கோவில் பகுதி, சந்நதி தெரு வழியாக விளாத்திகுளம் காவல் நிலையம் வந்து கொடி அணிவகுப்பு நிறைவடைந்தது.
இந்த கொடி அணிவகுப்பில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ், எல்லை பாதுகாப்பு படை துணை தளபதி ஏ.கே. லேம்கான், விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ், விளாத்திகுளம் குற்ற பிரிவு ஆய்வாளர் முருகன், மசார்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் அனிதா, விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மீராள் பானு, எட்டையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பொன்ராஜ், தருவைகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன், விளாத்திகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் தேவராஜ், காசிலிங்கம் மற்றும் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் உட்பட அஸ்ஸாம் மாநில எல்லை பாதுகாப்பு படையினர் 90 பேர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் உட்பட 200 பேர் கலந்து கொண்டனர்.