தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு, செய்துங்கநல்லூர் மற்றும் சேரகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குசாவடி மையங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
முறப்பநாடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அனவரதநல்லூர், செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தாலக்குறிச்சி, விட்லாபுரம், கருங்குளம், கால்வாய் மற்றும் சேராகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்குகாரசேரி ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்து, அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் உள்ளனவா என்றும், அப்பகுதிகளில் சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் ஏதும் உள்ளனவா என்பது குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் சம்மந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.
ஆய்வின்போது முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன், உதவி ஆய்வாளர் ராஜாராபர்ட், செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாசுந்தர், உதவி ஆய்வாளர்கள் முகம்மது பைசல், அந்தோணி திலிப், கருப்பையா, சேரகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அல்லிஅரசன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.