• vilasalnews@gmail.com

கடம்பூர் ராஜுவுடன் எஸ்.பி.சண்முகநாதன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு

  • Share on

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி தெற்கு மாவட்ட  செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ, தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜுவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்

தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6 -ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ஆளும் கட்சியான அதிமுக தமிழக சடடமன்றத் தேர்தலில் போட்டியிடும் 6 பேர் கொண்ட அதிகாரப்பூர்வ முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  இதில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் தமிழக முதல்வர் கே. பழனிசாமியும், போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் போட்டியிடுகிறார்கள். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் சண்முகநாதன் எம்எல்ஏ போட்டியிடுகிறார்.

இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி  வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி தெற்கு மாவட்ட  செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ, தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜுவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். 

அப்போது அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏவை வாழ்த்தி பொன்னாடை அணிவித்தார்.

இந்நிகழ்வின் போது, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான மோகன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆறுமுகநேரி கே.ஆர்.எம் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தார்.

  • Share on

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் இருண்ட மாநிலமாக தான் இருக்கும் - பாஜக மாநில தலைவர் எல். முருகன்

உரிமம் பெற்று வைத்திருக்கும் துப்பாக்கிகளை காவல்நிலையங்களில் ஒப்படைக்கை எஸ்பி உத்தரவு

  • Share on